Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

நவம்பர் 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அரசாங்கத்தினால் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 25,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

2026ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதங்களின்போது, பொருளாதார நிபுணர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட சில பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு சம்பள மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புகள் வழங்கப்படுவது குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர்கள், அதே அலுவலகங்களில் பணியாற்றும் தமக்கும் சமமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது சுமார் 65,000 ரூபா மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் தமக்கு, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் குடும்பத்தை நடத்துவது பெரும் சவாலாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, வெளிமாவட்டங்களிலிருந்து சுமார் 150 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்து பணிக்கு வருவோருக்கு மாதாந்தப் போக்குவரத்துச் செலவாக மாத்திரம் சுமார் 15,000 ரூபா செலவாகுவதாகவும், உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஏழு வருடங்களாக அரச சேவையில் பணியாற்றியும் தங்களால் எந்தவொரு சேமிப்பையும் மேற்கொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கும் அவர்கள், அரச ஊழியர்கள் கடன்சுமையின்றி கௌரவமான வாழ்க்கையை முன்னெடுக்கக்கூடிய வகையில் சம்பளக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்து அரச சேவையில் இணைந்துள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பும் அரச சேவைக்கு இன்றியமையாதது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாசிப்பின்போது தமது கோரிக்கைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு, அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதுடன், வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 25,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேவேளை, தமது போராட்டங்களால் மக்களுக்கான அரச சேவைகள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு ஒன்றை வழங்குமாறும் அரசாங்கத்திடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் பெய்த திடீர் மழை – சிரமங்களை எதிர்கொண்ட சாரதிகள்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் காதலனுக்காகத் தாயின் தாலிக்கொடியைத் திருடிய மகள் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கண்டுபிடிப்பு – விசாரணைகள் ஆரம்பம்

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடாவை குறிக்க ‘இணை உறுப்பினர்’ சொல் நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம்

அக்டோபர் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

டிசம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

மே 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?