டொரொண்டோவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22.11.2026) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக டொரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 12.30 மணியளவில் எல்லெஸ்மியர் வீதி (Ellesmere Road) மற்றும் பிரிம்லி வீதி (Brimley Road) ஆகிய பகுதிகளுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று ஆண்களை அதிகாரிகள் கண்டறிந்ததாக டொரொண்டோ பொலிஸார் சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையிலும், ஒருவர் உயிருக்கு ஆபத்தில்லாத பாரதூரமான காயங்களுடனும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ரொறன்ரோ மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை டொரொண்டோவின் கொலைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
இதேவேளை, பிரிம்லி வீதிக்கு மேற்கே உள்ள எல்லெஸ்மியர் வீதி மூடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிவாசிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
