மன்னார் மாவட்டத்திலுள்ள சில உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
ஒரே சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உணவில் சேர்த்தல் போன்ற செயற்பாடுகள் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில், ஐந்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட உணவுத்துறை வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
உணவக உரிமையாளர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மக்களுக்கு பாதுகாப்பான உணவுகளை வழங்க வேண்டும் எனவும் நகர முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
