Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

அக்டோபர் 12, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்துடன் பொலிஸாருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் 39 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார், நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலைமீன்மடுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

திராய்மடு பகுதியில் நீண்டகாலமாகச் சில பொலிஸாரின் அனுசரணையுடன் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் இடம்பெறுவதாகக் கூறி, கடந்த 3ஆம் திகதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இதன்போது, சுமார் 400 பேரின் கையொப்பங்களுடன் கூடிய முறைப்பாட்டு மகஜர் ஒன்று தமது அமைப்பிடம் கையளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வலித் லீலாரத்னவைச் சந்தித்து முறைப்பாடு முன்வைக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 7ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 20 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதாகவும், தொடர்ந்து கடந்த 11ஆம் திகதி திராய்மடு பகுதியில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், 39 லீற்றர் கசிப்பும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், பெண் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்துப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்குப் பொலிஸ் நிலையச் சிறையில் உறங்குவதற்காகப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மெத்தை வழங்கியதாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் குற்றஞ்சாட்டினார். குறித்த நபர் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர் என்றும், 75க்கும் மேற்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டவிரோத மதுபான வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவதில் கொக்குவில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பொலிஸ் தரப்பின் விளக்கம் குறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை.

சட்டவிரோத மதுபான மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் இளைஞர்கள் தொடர்புகளைப் பேண வேண்டாம் எனவும், அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் பெயர் விவரங்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

முந்தைய செய்தி வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!
அடுத்த செய்தி நெல்லியடியில் புதிய மதுபானசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

ஜூலை 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

மார்ச் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் 1000 மில்லியன் ரூபா செலவில் 887 கிராமிய பாலங்கள்

ஜூலை 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?