மொன்றியல் நகர நிர்வாகத்தில் நிலவும் கட்டமைப்பு ரீதியான இனவாதப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக, நகரின் நிர்வாகக் குழுவில் தனிப்பட்ட பொறுப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Projet Montréal கட்சியின் இடைக்காலத் தலைவரான Ericka Alneus இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நகர நிர்வாகத்தில் இனவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறையிலும் நிர்வாக அமைப்புகளிலும் பொறுப்புக்கூறல் அவசியம் என எதிர்க்கட்சி வலியுறுத்துகிறது.
குறிப்பாக, மொன்றியல் காவல்துறையில் ஏழு அதிகாரிகள் இனவாதம் மற்றும் தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரமும் இந்த விவாதத்திற்கு முக்கிய பின்னணியாக அமைந்துள்ளது.
நகர மேயர் Soraya Martinez Ferrada தலைமையிலான நிர்வாகம் இந்தக் கோரிக்கைக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது கவனிக்கப்படுகிறது.
மொன்றியலில் வாழும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் சமத்துவம் மற்றும் நகர நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை தொடர்பான விவாதமாக இது உருவெடுத்துள்ளது.
