Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு வெள்ளம் தொடர்பாக போலி AI காணொளிகள் – மேயர் எச்சரிக்கை

நவம்பர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு வெள்ளம் தொடர்பாக போலி AI காணொளிகள் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் எச்சரிக்கை

நாட்டில் சீரற்ற வானிலை நிலவியமையால் பல்வேறு இடங்களில் வெள்ள நிலைமை ஏட்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகச் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட போலிக் காணொளிகளைத் தயாரித்து சமூக ஊடகங்களில் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மேயர் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள ஒன் காலி ஃபேஸ் வணிக வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் காட்டும் காணொளிகள் பேஸ்புக் மற்றும் டிக்டொக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.

எனினும், இந்தக் காணொளிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை அல்லது திருத்தப்பட்டவை என்பதை ஃபேக்ட் கிரெசெண்டோ ஸ்ரீலங்கா உண்மை சரிபார்ப்பு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

காணொளியில் சிதைக்கப்பட்ட முகங்கள், இயற்கைக்கு மாறான நீரின் அசைவுகள் மற்றும் தவறான எழுத்துருக்கள் காணப்பட்டதாகவும், கூகுளின் SynthID கண்டறியும் கருவியும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிக வளாகத்திலுள்ள கடை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெள்ளநீர் கட்டடத்திற்குள் நுழையவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் சிறிதளவு நீர் தேங்கியிருந்த போதிலும், காணொளியில் காட்டப்பட்டதைப் போன்ற நிலைமை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் உண்மையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தாலும், ஒன் காலி ஃபேஸ் வணிக வளாகம் வெள்ளத்தில் மூழ்கியதாகப் பரப்பப்படும் தகவல் போலியானது என உண்மை சரிபார்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் எச்சரித்துள்ளார்.

முந்தைய செய்தி தெற்கு கடற்பரப்பில் பாரிய போதைப்பொருள் மீட்பு – ஐவர் கைது
அடுத்த செய்தி நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக இல்லை -தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியலின் ‘பெல்கோ’ கலைக் கட்டடத்தின் புதிய உரிமையாளர், ”அதன் பாரம்பரிய அடையாளம் பேணப்படும்” என உறுதியளிப்பு.

ஜூலை 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

குறிகாட்டுவானில் மூழ்கிய கடற்பாதையை கரைக்கு கொண்டு வந்த கடற்படையினர்

மே 27, 2026
இலங்கை

வனத்துறையின் அரச வாகனம் முறைகேடாக பயன்பாடு

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

ஜூலை 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?