லவால் நகரில் கடந்த 2025ஆம் ஆண்டில் பொதுமக்களிடமிருந்து அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக நகர Ombudsman அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக, குளிர்காலத்தில் வீதிகளில் குவியும் பனியை அகற்றுவதில் ஏற்பட்ட தாமதங்கள் தொடர்பாக 64 புகார்கள் பதிவாகியுள்ளன. இது அந்த அலுவலகம் கையாண்ட மொத்தப் புகார்களில் 14 சதவீதமாகும்.
மேலும், புதிய மின்னணு வழிகாட்டிப் பலகைகள்(Digital Road Signs) தொடர்பாகவும் 15 புகார்கள் பதிவாகியுள்ளன.
பனியை அகற்றும் வாகனங்கள் வராதபோதும் அறிவிப்புப் பலகைகள் தொடர்ந்து ஒளிர்வது உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
