Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

TIN சான்றிதழ் சமர்ப்பிக்கும் கட்டாய நடைமுறை ஏப்ரல் 1 வரை ஒத்திவைப்பு!

நவம்பர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எட்டு வகையான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தனிநபர்கள், வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இத் தகவலை, யாழ்ப்பாண பிராந்திய உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் ஏ.பி. குணதுங்ஹ, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனுக்கு அறிவித்துள்ளார்.

2026 நவம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த இந்தக் கட்டாய ஏற்பாடு, பொதுமக்களிடையே TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகளவிலான கேள்வி மற்றும் நெரிசல் காணப்படுவதைக் கருத்திற்கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தனிநபர்கள் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், நிதி அமைச்சின் அனுமதியுடன் குறித்த கட்டாய நடைமுறையை 2027 ஏப்ரல் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவு செய்துள்ள தனிநபர்கள் தமது TIN சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று மற்றும் இலகுவான நடைமுறைகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.

மேலும், இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் இணையவழி மின்னணுச் சேவைகள் (e-Services) தளத்தைப் பயன்படுத்தி TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி பருவமழைக் காலத்திலும் நாகப்பட்டினத்திற்கான கப்பல் சேவை தொடர்ந்து இயங்கும்!
அடுத்த செய்தி இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். பறக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி

மே 4, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு அபிவிருத்திக்கு முற்றுக்கட்டையிடும் வனவளத் திணைக்களம்..

மார்ச் 25, 2025
இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்

ஆகஸ்ட் 24, 2025
இலங்கைமுதன்மை செய்தி

இஷாரா செவ்வந்தி பாதுகாப்பாக தலைமறைவு – விசாரணையில் தகவல்

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?