கியூபெக்கின் புதிய சட்டமன்ற அமர்வு தொடங்கப்படும் திகதி இரண்டாவது முறையாகவும் பிற்போடப்பட்டுள்ளது.
புதிய சட்டமன்ற அமர்வின் ஆரம்பத் திகதி எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்துள்ள பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois) கட்சி, சட்டமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான திகதியைத் தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது.
ஆரம்பத்தில் புதிய சட்டமன்றம் இம்மாதம் 17ஆம் திகதி கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், பின்னர் அது இம்மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, டிசம்பர் 1 ஆம் திகதி புதிய சட்டமன்ற அமர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
