Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

6ஆம் தேதி வரை அன்பில் மகேஷூக்கு நீதிமன்ற காவல்!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரூ.100 கோடி கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் லஞ்சப் புகார் வழக்கில், வரும் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அன்பில் மகேஷைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.100 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், போலீஸ் கஸ்டடி விசாரணை முடிந்த நிலையில் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுச் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, போலீஸ் காவலில் இருந்தபோது உணவு, உடை எல்லாம் முறையாக வழங்கப்பட்டனவா என்றும், விசாரணையின்போது காவல்துறையினர் துன்புறுத்தினார்களா என்றும் அன்பில் மகேஷிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அவர், தம்மைக் காவல்துறையினர் துன்புறுத்தவில்லை என்றும், உணவு மற்றும் உடை முறையாக வழங்கப்பட்டதாகவும் நீதிபதியிடம் கூறினார்.

அன்பில் மகேஷின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையையும் காவல்துறையினர் நீதிபதியிடம் தாக்கல் செய்தனர்.

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஷிை வரும் 6ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்கச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான காவல்துறை பதில் மனுவை நாளை காலை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையின் பதில் மனுவை முன்கூட்டியே வழங்கினால் நாளை வாதிட எளிமையாக இருக்கும் என்ற அன்பில் மகேஷின் தரப்பு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும், சிறைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக 10 நிமிடங்கள் வழக்கறிஞர்களுடன் பேசுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தவெக கல்வி விருது வழங்கும் விழா: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!
அடுத்த செய்தி இடைக்காலத் தேர்தல் தோல்விக்கு எரிபொருள் விலை உயர்வே காரணம்: அதிபர் ட்ரம்ப்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

கிளாஸ்கோ காமன்வெல்த் 2026இல் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

செப்டம்பர் 1, 2026
இந்தியா

கோயில் கூட்ட நெரிசலில் 9 பேர் பலி.மோடியின் உடனடி நடவடிக்கை!

நவம்பர் 1, 2025
இந்தியா

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத் தாக்கல்

செப்டம்பர் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?