Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கர்ப்பிணிப்பெண் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவன்!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் தனது கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றத்தை, குற்றவாளியான முஸ்தபா கலீல் மெஷ்கென் என்ற நபர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அன்று மொன்றியல் நகரின் பொயின்ட்-ஓக்ஸ்-ட்ரெம்பில்ஸ் (Pointe-aux-Trembles) பகுதியில் அமைந்துள்ள தங்களின் வீட்டின் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த 10 வாரக் கர்ப்பிணியான நர்ஜஸ் பென் எடர் (Narjes Ben Yedder) என்ற பெண்ணை, அவரது கணவரான முஸ்தபா குத்திக் கொலை செய்தார்.

இக்கொலைக்காக அந்த வீட்டின் சமையலறையிலிருந்து எடுத்து வரப்பட்ட இரண்டு கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மனைவியின் மீது 49 முறை கத்திக் குத்துத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்ததுடன், அதில் 32 குத்துக்காயங்கள் அவரது வயிற்றுப் பகுதியிலேயே ஏற்படுத்தப்பட்டிருந்தன.

மொன்றியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கவிருந்த நிலையில், தாம் கொலை புரிந்ததை குற்றவாளி முஸ்தபா கலீல் மெஷ்கென் ஒப்புக்கொண்டார்.

கொலையைப் புரிந்த பின்னர், கொலைக் குற்றத்திற்கு நாட்டில் வழங்கப்படும் சிறைத்தண்டனை காலம் எவ்வளவு என்பது குறித்து அவர் இணையத்தில் தேடி ஆராய்ந்துள்ளார்.

அதன் பின்னரே, அவசர அழைப்பு இலக்கம் மூலமாகப் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தாம் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாக முஸ்தபா கலீல் மெஷ்கென் மிகவும் அமைதியான முறையில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று, ரத்தக் கறைகளுடன் காணப்பட்ட முஸ்தபாவை உடனடியாகக் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையைக் காண்பதற்காகக் கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் துனிசியாவிலிருந்து மொன்றியலுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றிய வீதிகளில் புதிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த காவல் பிரிவு நடவடிக்கை!
அடுத்த செய்தி அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் கனடாவின் வர்த்தக மூலோபாயத்தில் மாற்றமில்லை: அமைச்சர் டொமினிக் லெப்லாங்க்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

ஜூலை 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கோல் கம்பம் விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு

ஜூலை 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெளிநாட்டவர்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி – இலங்கை மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு!

ஆகஸ்ட் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்

ஜூலை 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?