Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடத்த இருந்த ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல் – குற்றவாளி கைது

நவம்பர் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக எஸ்.பி.பட்டினம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான 19.8 கிலோ ஹஷீஷ் போதை பொருளை பொலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை கைது செய்து பொலீசார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை உட்கோட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் பொலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் நேற்று செவ்வாய் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 2 கிலோ ஹஷீஷ் (கஞ்சா செடியில் இருந்து எடுக்கப்படும் பிசின் போன்ற போதைப்பொருள்) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் மேலும் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 17.8 கிலோ ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடற்கரை மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 19.8 கிலோ ஹஷீஷ் போதை பொருள் சிக்கியது. இவை இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக பதுக்கி வைக்கப் பட்டிருந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் திருவாடானை தளிர் மருங்கூர் பகுதியைச் சேர்ந்த மனோ (34) என்பது தெரியவந்தது.

இவர் ஏற்கனவே தொண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்.

மேலும், எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முந்தைய வழக்கில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் மனோ தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் பெருமளவிலான ஹஷீஷ் போதைப்பொருளுடன் சிக்கிய அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலீசார் வழக்குப்பதிவு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட ஹஷீஷ் போதை பொருளின் மூலாதாரம், இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்ட வழிமுறை, கடத்தலுக்கு உதவியவர்கள் மற்றும் சர்வதேச கடத்தல் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி.பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19.8 கிலோ ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் தலை மறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் கடலோரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா
அடுத்த செய்தி பண்டாரவளை – ஹீல்ஓயா இடையேயுள்ள ரயில் பாதையில் மண்சரிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

ஜூலை 7, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

பல மில்லியன் டொலர் கடன்: Goodfood நிறுவனத்திற்கு நீதிமன்ற பாதுகாப்பு!

ஆகஸ்ட் 6, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்த அமைச்சரவை அனுமதி!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

பாதுகாப்பு ஆய்வுக்காக Goliath ராட்டினம் தற்காலிகமாக மூடப்பட்டது!

அக்டோபர் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?