மொன்றியல் நகரில் வேகமாக வந்த கார் மோதி 18 வயதான சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினரும், கியூபெக்கின் சுதேசிய காவல்துறை கண்காணிப்பு அமைப்பான BEI அமைப்பும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் திருடப்பட்ட ஒன்று எனவும், அதனை ஓட்டி வந்த சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாகக் கியூபெக்கின் சுயாதீன பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான BEI தனித்துவமான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கியூபெக் மாகாணப் பொலிஸாரின் (Sûreté du Québec) அடையாளம் குறிப்பிடப்படாத ரோந்து வாகனம் ஒன்று, வீதிப் போக்குவரத்து விதியை மீறியதாகக் கருதப்பட்ட ஒரு வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அந்த வாகனம் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு அதிவேகமாகத் தப்பிச் சென்ற வாகனமே சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவர் மீது மோதியதாக BEI தெரிவித்துள்ளது.
பொலிஸ் நடவடிக்கைகளின் போது நபர் ஒருவர் உயிரிழந்தாலோ அல்லது படுகாயமடைந்தாலோ BEI விசாரணை நடத்துவது வழமையான நடைமுறையாகும்.
அதற்கமைய, விபத்து நடப்பதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து 6 பேரடங்கிய விசாரணை அதிகாரிகளைக் கொண்டு BEI விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
