கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்று சுமார் 12 ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை காணி உரிமைகள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி அப்புத்தளை நகரில் வியாழக்கிழமை (29.10.2026) கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காணி உரிமைகளை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தினர்.
அதேவேளை, டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட அப்புத்தளை கல்காந்த தோட்ட மக்களுக்கும் இதுவரை வீடுகளும் காணிகளும் வழங்கப்படவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காணி மற்றும் வீட்டு உரிமைகளை விரைவாக வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

