லிந்துலை போலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டுக்கலை, தியணீலக்கலை தோட்ட பகுதிகளில் முட்பகல் 11.30 மணியளவில் குளவிக் கொட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 22பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மட்டுக்கலை தோட்டத்தை சேர்ந்த 15 பெண் தொழிலாளர்களும் 1 ஆண் தொழிலாளர் என 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தியணீலக்கலை தோட்டப் பகுதியில் 6 ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் 9 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

