Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் மெட்ரோவில் புதிய மாற்றம்!

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நகர நிர்வாகமும் Société de transport de Montréal (STM) நிறுவனமும் இணைந்து புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

குறிப்பாக, மெட்ரோ நிலையங்களிலும் ரயில்களிலும் பாதுகாப்பு உணர்வை அதிகரிப்பது, அவசர நிலைகளில் விரைவாக உதவி வழங்குவது மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ஆறு முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 52 புதிய சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளைப் படிப்படியாக நியமிப்பதற்கு நகரம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் 6.4 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது. புதிய நியமனங்கள் நிறைவடைந்ததும் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 230 ஆக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிய அதிகாரிகள் பணியில் இணையும் வரையில், இந்த இலையுதிர்காலம் முதல் மொன்றியல் பொலிஸ் சேவையான SPVM-இன் 12 மேலதிக பொலிஸ் அதிகாரிகள் மெட்ரோ வலையமைப்பில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மெட்ரோவில் மின்னணுக் கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வீடற்ற நிலை, மனநெருக்கடி அல்லது சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு உதவுவதற்காக சமூகப் பணியாளர்களின் பங்களிப்பும் அதிகரிக்கப்படவுள்ளது.

இன்னொரு முக்கிய அறிவிப்பாக, 2027ஆம் ஆண்டில் மெட்ரோ சேவையின் அடர்த்தியை ஐந்து சதவீதத்தால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மாலை நேரங்களில் கூடுதல் சேவைகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பது எதிர்பார்க்கப்படுகிறது.

மொன்றியல் மெட்ரோவைப் பயன்படுத்தும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலை முடித்துத் திரும்புவோருக்கு இந்த மாற்றங்கள் முக்கியமானதாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.

முந்தைய செய்தி தலைநகர் கீவ் மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!
அடுத்த செய்தி டெல்லியில் இருந்து சென்னை செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மயானத்தில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பிப்ரவரி 24, 2026
அண்மைய செய்திகள்கனடா

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கனடா 18வது இடத்தில்!

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவு புதைகுழி வழக்கு – மார்ச் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

டிசம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?