Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் 738 பேரின் பழங்குடி அந்தஸ்து ரத்து

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் உள்ள எசிபித் (Essipit) இனு பழங்குடி இனத்தைச் சேர்ந்த 738 உறுப்பினர்களின் பழங்குடி அந்தஸ்தை, மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான விசாரணையின் போது, செனட் சபைக் குழுவின் முன்பு ஆஜரான மத்திய அரசின் துறைசார் உயரதிகாரிகள் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் செனட் சபையில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான விசாரணையில், தங்களது பாரம்பரிய அந்தஸ்து பறிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட 738 பேரும் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்டின் கிசெரா (Christine Kichera) மற்றும் அடேலைட் மாட்சிராகன் (Adelaïde Matshiragan) ஆகிய இரண்டு இனு இனப் பெண்களின் வழிவந்தவர்கள் ஆவர்.

அக்காலத்தில் இப்பெண்கள் பழங்குடியல்லாத ஆண்களைத் திருமணம் செய்துகொண்டனர் என்ற காரணத்துக்காக, ‘இந்தியச் சட்டம்’ (Indian Act) விதிகளின்படி அவர்களின் சந்ததியினருக்குப் பழங்குடி அந்தஸ்து மறுக்கப்பட்டு வந்தது.

பின்னர், பாலின அடிப்படையிலான இந்த நீண்டகாலப் பாகுபாட்டைக் களைவதற்காகக் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இதன் மூலம் தகுதியடைந்த ஸ்டெ-ஜெலாய்ஸ் டுபே உள்ளிட்டோர் தாங்கள் இனு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அந்தஸ்துக்காக விண்ணப்பித்தனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு இனு சமூக அந்தஸ்து வழங்கப்பட்ட போதும், 2024-ஆம் ஆண்டில், அந்தஸ்து பெற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அவர்களின் தகுதி மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர்  5 ஆம் ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட இறுதி முடிவின் மூலம், அந்தப் பெண்களின் வழிவந்தவர்களின் பழங்குடி அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் மேப்பிள் சிரப் கையிருப்பு தீரும் அபாயம்!
அடுத்த செய்தி Pornhub தாய் நிறுவனத்திற்கு எதிராகக் கூட்டு வழக்கு – கியூபெக் நீதிமன்றம் அனுமதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நவீன பாலம்

ஜூலை 28, 2026
கியூபெக்

மொன்றியல் நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – ஒருவர்  படுகாயம்

ஜூலை 20, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பனிப்புயல் அபாயம் – மொன்ரியலில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

மார்ச் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

டிசம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?