கியூபெக் மாகாண அரசியலில் முக்கியமான அரசியல் மாற்றம் இன்று இடம்பெறவுள்ளது.
கியூபெக் மாகாணத்தின் புதிய முதலமைச்சராக பால் செயிண்ட்-பியர் பிளாமண்டன் இன்று பதவியேற்கவுள்ளதுடன், தனது புதிய அமைச்சரவையையும் அறிமுகப்படுத்தவுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற மாகாணத் தேர்தலில் வெற்றிபெற்ற Parti Québécois கட்சி, பத்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.
இந்தத் தேர்தலில் Parti Québécois கட்சி 59 ஆசனங்களைக் கைப்பற்றியது. எனினும், பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 64 ஆசனங்களை அந்தக் கட்சி பெறவில்லை. இதனால், கியூபெக்கில் சிறுபான்மை அரசாங்கமாக அமைகிறது.
இந்த நிலையில், இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அமைச்சரவையில் 23 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய Coalition Avenir Québec அரசாங்கத்தின் அமைச்சரவையில் 29 உறுப்பினர்கள் இருந்த நிலையில், புதிய அரசாங்கம் ஒப்பீட்டளவில் சிறிய அமைச்சரவையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

