Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மக்கில் பல்கலைக்கழகத்தில் கைதிக்கு தடை – மீண்டும் வெடித்த சர்ச்சை

அக்டோபர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மக்கில் பல்கலைக்கழகத்தின் (McGill University) பகல்நேர பரோலில் (day parole) வெளிவந்துள்ள கைதி ஒருவர் கல்வி பயில அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் மீண்டும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெப்ரி ஜோர்ஜ் ஈவர்ட் (Jeffrey George Ewert) என்ற இந்த நபர் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் மக்கில் பல்கலைக்கழகத்தில் சட்ட வகுப்புகளில் கலந்துகொண்டு வந்தார்.

எனினும், கடந்த இம்மாதத் தொடக்கத்திலிருந்து அவர் மக்கில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

60 வயதுடைய ஜெப்ரி ஜோர்ஜ் ஈவர்ட், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு இரண்டு வெவ்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தண்டனை பெற்றவராவார்.

அவர் ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததோடு, மற்றொரு 15 வயது சிறுமியைத் தாக்கி வாழ்நாள் முழுவதும் முடங்கும் நிலைக்கு ஆளாக்கியதாகப் பரோல் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அவரது வன்முறைப் பின்னணி பல்கலைக்கழகத்தால் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், இதனால் தாங்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதாகவும் சில மாணவர்கள் தெரிவித்ததை அடுத்தே, பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் இந்த முடிவினை மேற்கொண்டது.

இந்நிலையில், ஈவர்டை மீண்டும் வகுப்புகளுக்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்ட பீட மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து ஒரு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

மூன்று சட்ட மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த மனுவில் நூறுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

உரிய முன்னறிவிப்பின்றி முறையான விசாரணையின்றி அவர் தடை செய்யப்படுவது நியாயமற்றது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ‘ஓம்’ படத்திலிருந்து ‘வீழா வீரா’ பாடல் வெளியீடு!
அடுத்த செய்தி செயிண்ட்- மிக்கேல் அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த பேருந்து ஓட்டுநர்கள்

செப்டம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

“நாம் முன்பு கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை, இதற்கு முன்பு நகராத வேகத்தில் செய்ய வேண்டும்,”  பிரதமர் மார்க் கார்னி!

மார்ச் 21, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் 68,000 வேலைவாய்ப்புகள் இழப்பு — வேலையின்மை விகிதம் அதிகரிப்பு!

அக்டோபர் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?