அரிசிகளுள் எத்தனையோ வகையான அரிசிகள் உள்ளன. அவற்றுள் வெவ்வேறு விதமான சத்துக்களும் உள்ளன.
அந்தவகையில், கருங்குறுவை அரிசியானது, பல நூற்றாண்டுகள் பழைமையான அரிசியாகும்.
இதன் தோல் மற்றும் அரிசியின் நிறம் கறுப்பு நிறத்தில் இருப்பதால் இப் பெயர் வந்துள்ளது.
இந்த அரிசியில் இரும்புச்சத்து, கல்சியம், விட்டமின் பி,ஏ ஆகியன உள்ளன.
தசைப்பிடிப்பு, மூட்டு பலவீனம்,பக்கவாதம்,குறைந்த இரத்த அழுத்தம், சோர்வு, மலச்சிக்கல், இதய பிரச்சினைகள், பார்வை தொடர்பான பிரச்சினைகள், முடி உதிர்தல் போன்ற பொட்டாசியம், துத்தநாகத்தால் ஏற்படும் இப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும், அதன் சத்தை மேம்படுத்தி சமநிலையில் வைப்பதற்காகவும், கருங்குறுவை அரிசி உதவுகிறது.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.
செரிமானத்துக்கு நல்லது. புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை தடுக்கும்.
