நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு உடனடி தீர்வைத் தரும் ஒரு பொருள் தான் சுக்கு.இஞ்சியை சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து வெயிலில் உலர்த்துகிறார்கள். அப்படி காய்ந்த இஞ்சியே சுக்கு ஆகிறது.
அந்தவகையில் சுக்கினால் என்னென்ன நன்மைகள் எனப் பார்ப்போம்.
சாப்பிடும் உணவுகளில் சிறு சுக்குப் பொடியை கலந்தால் உணவு எளிதில் ஜீரணமாகிவிடும்.
வயிற்று வலி அடியோடு சரியாகிவிடும்.
தண்ணீர் விட்டு சுக்கை உரைத்து பொட்டுகளில் தடவினால் தலைவலி உடனே சரியாகும்.
விக்கல் வரும் சந்தர்ப்பத்தில் சுக்குப்பொடியை தேனில் கலந்து குடித்தால் விக்கல் சரியாகிவிடும்.
முகத்தில் ஏற்படும் பருக்களின் மீது சுக்கு விழுதை தடவினால் சில நாட்களில் பருக்கள் மறைந்துவிடும்.
சுக்குப் பொடியை தேனில் குழைத்தோ, சர்க்கரையில் கலந்தோ உட்கொண்டால் தலைவலி, உடல் வலி, வாந்தி ஆகியவை சரியாகும்.
அரைத்த சுக்கு விழுதை தேள் கொட்டிய இடத்தில் தடவி நெருப்பு சூடு காட்டினால் தேள் விஷம் நீங்கிவிடும்.
உடலில் வீக்கங்கள் இருப்பின் சுக்கை அரைத்து தடவி சூடு காண்பித்தால் நோய் நீங்கும்.
