சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன.
தலைநகர் ரியாத்திலுள்ள King Khalid சர்வதேச விமான நிலையம் மற்றும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள King Fahd சர்வதேச விமான நிலையம் தொடர்பாகப் பாதுகாப்பு சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து விமான நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், தங்களது விமான நிறுவனங்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து சில சர்வதேச விமான நிறுவனங்கள் தமது விமானச் சேவைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ரியாத் உள்ளிட்ட நகரங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் தமது விமானப் பயண நேரம் மற்றும் சேவை நிலவரம் குறித்து விமான நிறுவனங்களிடம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனவா அல்லது பயண நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைப் பயணத்திற்கு முன்னர் உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக இலங்கைத் தொழிலாளர்கள், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானமாகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
