மொன்றியல் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கண் மருத்துவ நிறுவனமான ‘லசிக் எம்.டி.’ (Lasik MD), தனது நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.
Escort network எனப்படும் தாதியர் சேவகம் தொடர்பான சட்டவிரோதக் குற்றச்சாட்டுகளில் அவர் தொடர்புபட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகமொன்றின் புலனாய்வு நிகழ்ச்சியில் இது தொடர்பான குறித்த அறுவை சிகிச்சை நிபுணர் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தன.
மொன்றியல் காவல்துறையினர் ‘XO’ என்ற தாதியர் சேவகம் தொடர்பான முகவரகத்தை முடக்குவதற்காகப் பல்வேறு கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த வழக்குத் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களிலேயே அந்த அறுவை சிகிச்சை நிபுணர் பெயர் வெளியாகியுள்ளது.
குறித்த முகவரகத்தின் தலைவருக்கு ஆட்களைத் திரட்டித் தரும் இடைத்தரகராகவும், முகவராகவும் அந்த அறுவை சிகிச்சை நிபுணர் செயற்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் விவரிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அவர் மீது எந்தவிதமான உத்தியோகபூர்வக் குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை.
இருப்பினும், அடுத்த ஆண்டு இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
