கியூபெக்கில் பழமையான நீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் உட்கட்டமைப்புகள் காரணமாக, புதிய வீடுகளைக் கட்டுவதில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன.
1950 முதல் 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அமைக்கப்பட்ட பெரும்பாலான நீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள் தற்போது சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
இதனால் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 43 நகராட்சிகள் தங்களது கட்டுமானத் திட்டங்களைக் கட்டுப்படுத்தியுள்ளதுடன், சுமார் 36 ஆயிரம் வீடுகளின் கட்டுமானமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
கியூபெக்கின் நீர் உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கு சுமார் 188.5 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பே-செயின்ட்-பால் நகரில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு 13 முதல் 14 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியைத் திரட்ட முடியாத நிலையில், புதிய கட்டுமானங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

