ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தை விலை மற்றும் ஏனைய செலவினங்களின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் டீசலுக்கு 70 ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், டீசலுக்கு வழங்கப்படும் மானியம் பெட்ரோலுக்கு நீடிக்கப்படாது எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

