மொன்றியாலில் நடைபெற்ற உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டிகளுக்காக மூடப்பட்டிருந்த பல வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
Mount Royal Avenue, Park Avenue, Pine Avenue உள்ளிட்ட போட்டிப் பாதைகளில் இருந்த தடுப்புகள் மற்றும் அடையாளங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
எனினும் போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள், வேலிகள் மற்றும் சில கட்டமைப்புகளை முழுமையாக அகற்றும் பணிகள் இன்னும் சில நாட்கள் தொடரும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Mount Royal Avenue மற்றும் Pine Avenue ஏற்கனவே போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கட்டமைப்புகளை அகற்றும் பணிகளின்போது சில இடங்களில் குறுகிய கால போக்குவரத்து தடைகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த பகுதிகளில் பயணம் செய்யும் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

