Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

மைத்ரேயி ராமகிருஷ்ணனைச் சுற்றி அதிகரிக்கும் சர்ச்சை!

செப்டம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் பிறந்து வளர்ந்த இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் அடையாளம் தொடர்பான கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

Netflix-இன் புதிய திரைப்படமான “Best of the Best” திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்ற மைத்ரேயி ராமகிருஷ்ணன், தன்னை “Tamil Eelam woman” என அடையாளப்படுத்திப் பேசியிருந்தார்.

தனது நாடு கனடா என்றும், தனது குடும்பத்தின் வேர்கள் இலங்கையில் இருப்பதாகவும், தனது கலாசார அடையாளம் தமிழ் என்றும் அவர் முன்னதாகவும் கூறியுள்ளார்.

இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து, இலங்கையில் சில சமூக வலைத்தளப் பக்கங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர் நடித்துள்ள “Best of the Best” திரைப்படத்திற்கு எதிராக IMDb உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரே நட்சத்திர மதிப்பீடுகளை வழங்குமாறு சில சமூக ஊடகப் பதிவுகள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக IMDb தளத்தில் “unusual voting activity” எனப்படும் அசாதாரண வாக்குப்பதிவு தொடர்பான எச்சரிக்கை காணப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஈழத் தமிழ் அடையாளம் மற்றும் அவர் நடித்த திரைப்படம் தொடர்பான விவாதம், பரதநாட்டியம் மற்றும் தமிழ் கலாசார பிரதிநிதித்துவம் குறித்தும் விரிவடைந்துள்ளது.

மைத்ரேயி ராமகிருஷ்ணன், “Never Have I Ever” என்ற Netflix தொடரின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மைத்ரேயிக்கு எதிரான சமூக வலைத்தளத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என  பலரும்  கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மைத்ரேயி ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட அடையாளக் கருத்துகளைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த விவாதம், தற்போது இலங்கையிலும் புலம்பெயர் தமிழர் சமூகங்களிலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்தும் பேசப்பட்டு வருகிறது.

முந்தைய செய்தி மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு
அடுத்த செய்தி அணுசக்தி திட்டத்தில் ஈரான் எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது: ஈரான் திட்டவட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

பிப்ரவரி 8, 2026
கனடாமுதன்மை செய்தி

பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு மாகாணங்களுக்குள்ளேயே நிலவும் வர்த்தகத் தடைகளே காரணம் – சர்வதேச நாணய நிதியம்

ஜனவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

செப்டம்பர் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?