Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு!

செப்டம்பர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிழக்கு மாகாண மக்களுக்கு நவீன இருதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஜப்பான் அரசின் நிதியுதவியுடன், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரகமான JICA-வின் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்காக நிர்மாணப் பணிகளுக்கு 2 ஆயிரத்து 403 மில்லியன் ரூபாயும், மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 1 ஆயிரத்து 782 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 4 ஆயிரத்து 185 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தத் திட்டத்தின் கீழ், எட்டு மாடிகளைக் கொண்ட இருதய நோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.

அதிநவீன அறுவைச் சிகிச்சைக்கூடங்கள், வெளிநோயாளர் மற்றும் விடுதி நோயாளர் சிகிச்சை வசதிகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் ஏற்படுத்தப்படவுள்ளன.

கட்டிட நிர்மாணப் பணிகள் 2028ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமதா தெரிவித்துள்ளார்.

சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி ஆறு வயது மகள் உயிரிழந்த சம்பவம் – 9 மாதங்களாக காவலில் தந்தை
அடுத்த செய்தி முல்லைத்தீவு மருத்துவமனையில் புதிய மருத்துவ விடுதிக்கு அடிக்கல் நாட்டி வைப்பு! 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் அடையாளம்(Video)

டிசம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா -பிரதமர் மோடி பெருமிதம்

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல்

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு!

ஜூலை 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?