Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

செப்டம்பர் 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வட்டாரபிரதேச சபை உறுப்பினர் ச.சிவயோகலக்சுமி உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,

இலங்கையில இருக்கிற நீதிபதிகளுடைய வயதை கூட்டுகிறார்கள். 62 வயதோடு இருக்கிற நீதிபதியை 67 வயது வரைக்கும் கொண்டு வருகிறார்கள்.

மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் – இரண்டு நீதிமன்றங்களுக்கும் வருகின்ற நீதிபதிகளின் வயதை 62 வயதிலிருந்து 67 வயது வரைக்கும் கொண்டு வர தீர்மானித்திருக்கிறார்கள்.

இதற்கு பல எதிர்ப்புகள், பல இராஜதந்திரிகள் மத்தியிலும் இருக்கிறது. அதைவிட வழக்கறிஞர்கள் சங்கம் (Bar Association) என்று சொல்வது, வழக்கறிஞர்கள் சங்கமும் அதை கடுமையாக எதிர்க்கிறது.

எதிர்க்க எதிர்க்க பாராளுமன்றத்திலே அது விவாதத்திற்கு வருகிறது. வருகின்ற 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் பாராளுமன்றத்தில் அது விவாதத்திற்காக வருகிறது.

விவாதத்திற்கு வருகின்ற பொழுது, நாங்கள் அதனை எதிர்த்து வாக்களிப்பதாக தீர்மானித்திருக்கிறோம். அந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை.

அப்படி என்றால், இலங்கையில் இருக்கிற அனைத்து ஊழியர்களுக்கும் 65 வயதாக ஆக்குங்கள், பிரச்சினையில்லை. ஆனால் அரசாங்கம் யாரை மட்டும் கொண்டு வர முயற்சிக்கிறது என்றால் நீதிபதிகளை. தங்களுக்கு ஏற்ற நீதிபதிகளை நியமித்து, தங்களுக்கு ஏற்ற தீர்ப்புகளை வழங்க முயற்சிக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்படப் போவது நாங்கள்தான். உங்களுக்குத் தெரியும், நாங்கள் எதிர்க்கட்சிதான். நாங்கள் இந்த நாட்டில் ஆளுங்கட்சி இல்லை.

ஆனால், பிரதேச சபையில் ஆளுங்கட்சி யார்? நீங்கள்தான், நாங்கள்தான். நீங்கள்தான் நாங்கள்தான்.

அப்ப நாங்கள் பிரதேச சபையில் வருமானத்தை வைத்துக்கொண்டு, ஆளுங்கட்சியாக இதனை நாங்கள் செய்துதான் ஆக வேண்டும். இதிலிருந்து நாங்கள் விலகிப் போக முடியாது. இதனை நாங்கள் செய்கிறோம்.

ஆனால் மக்கள் சில நேரங்களில் தேர்தல் வரைக்கும் என்ன செய்கிறார்கள்? சில பேரை மாற்றித் தேர்வு செய்கிறார்கள். அல்லது மக்கள் ஏதோ ஒரு கோபத்தில் ஆராயாமல் பார்த்த உடனே தேர்வு செய்து விடுகிறார்கள்.

இன்றைக்கு அப்படி தேர்வு செய்யப்பட்டவரின் நிலைமை? போய் எங்களை யார் அழித்தானோ, எங்களை யார் இன அழிப்பு செய்தானோ, எங்கள் வீடுகளிலெல்லாம் இன்றைக்கும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்றால், எங்கள் பிள்ளைகளைக் காணவில்லை என்று யார் காணாமல் ஆக்கினானோ, அவனோடு மேடையில் ஏறி நின்று ஒருத்தன் பேசுகிறான் நேற்று! நீங்கள் வாக்கு போட்ட ஒருத்தன்தான்!

அவனை ‘தந்தை’ என்றான், அவன்தான் ‘நாட்டின் ஜனாதிபதி’ என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று அவனுக்கே தெரியாது! அவனுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே அவனுக்கே ஒன்றும் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்
அடுத்த செய்தி வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு

ஆகஸ்ட் 11, 2026
இலங்கை

91 லட்சம் மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

ஏப்ரல் 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முத்துநகர் விவசாயிகள் போராட்டம்-ஜனாதி பதியின் கவனத்திற்கு!

அக்டோபர் 18, 2025
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடுக்குளத்திற்கு விஜயம்!

செப்டம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?