Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

சீனாவின் ஹவாய் நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்க வழக்கு தொடக்கம்

செப்டம்பர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வணிக ரகசியங்களைத் திருடித் தனது தொலைத்தொடர்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஒரு “குற்றவியல் கும்பல்” என்று சீன நிறுவனமான ஹவாய் (Huawei) மீது அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் புரூக்ளின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

20 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்களைப் பாதிப்புக்குள்ளாக்கியும், நிதி அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியும் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த ஹவாய் முயன்றதாக அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் டெய்லர் ஸ்டவுட் தெரிவித்துள்ளார். சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இயங்குதள மூலக் குறியீடு (operating system source code) மற்றும் டி-மொபைல் நிறுவனத்தின் போன்களைப் பரிசோதிக்கும் ரோபோடிக் கை உட்பட ஐந்து அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வணிக ரகசியங்களைத் திருட ஹவாய் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இக்குற்றச்சாட்டுகளை ஹவாய் தரப்பு மறுத்துள்ளது. இது குற்றவியல் சதி அல்ல, சாதாரண வணிக போட்டி மற்றும் கண்டுபிடிப்பு என்று ஹவாய் வழக்கறிஞர் பிரையன் ஹெபர்லிக் வாதாடினார். தனிப்பட்ட ஊழியர்களின் தவறான நடவடிக்கைகளை அரசுத் தரப்பு குற்றவியல் நடவடிக்கைகளாகத் திரித்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் அடக்குமுறையைத் தன் அரசு கடுமையாக எதிர்ப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஈரானில் தனது வணிகத்தை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தி, அமெரிக்கத் தடைகளை மீறி நிதி அமைப்பின் மூலம் டாலர்களைப் பரிமாற்றம் செய்ததாக 2018-இல் இந்த வழக்கு தொடங்கியது. பின்னர் இதில் ‘ராக்கெட்டீரிங்’ குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்பட்டன.

2018-இல் கைது செய்யப்பட்ட ஹவாயின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ, 2021-இல் விடுவிக்கப்பட்டார். 2022-இல் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்கள் இந்த விசாரணையில் சான்றுகளாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த விசாரணையில், ஹவாய் மீதான தடையற்ற போட்டி மற்றும் தடை மீறல் குற்றச்சாட்டுகள் விரிவாக ஆராயப்படவுள்ளன.

முந்தைய செய்தி நிலவு ஆய்வுகளுக்காக Open-source AI மாதிரியை அறிமுகப்படுத்திய நாசா மற்றும் ஐபிஎம்
அடுத்த செய்தி ஐந்து லட்சத்திற்கு விற்கப்பட்ட மாம்பழம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அறிவியல் & தொழில்நுட்பம்

AI வளர்ச்சியுடன் அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்

ஆகஸ்ட் 10, 2026
அறிவியல் & தொழில்நுட்பம்

சீன ரோபோக்களை தேடும் உலக நாடுகள்

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

எக்ஸ் தளம் முடக்கம்….

மார்ச் 10, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

உங்கள் Wi-Fi Password மறந்து போய்விட்டதா?

மார்ச் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?