Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நேபாள பேரழிவில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு

செப்டம்பர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடுமையான அழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயுள்ள இந்த துயரத்திற்கு இடையே, இருவர் அற்புதமாக உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

நுவாகோட் மாவட்டம் பிதுர் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்த நான்கு மாடி வீட்டின் இடிபாடுகளுக்குள் 60 வயதான சந்திகா ஸ்ரேஷ்டா என்ற மூதாட்டி மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.

ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட மீட்புக்குழுவினர், களிமண் மற்றும் சேற்றைத் தோண்டி மூதாட்டியை மேல்தள ஜன்னல் வழியாகப் பத்திரமாக வெளியே எடுத்தனர்.

அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேபோல் மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டப் பகுதியில் அமைந்திருந்த இருண்ட சுரங்கப்பாதையில் உணவு மற்றும் வெளித்தொடர்பு ஏதுமின்றித் தவித்துக் கொண்டிருந்த சீன ஊழியர் லுஹைடாவ் என்பவரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்த இரண்டு அதிசய மீட்புச் சம்பவங்களும் மக்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளன.

முந்தைய செய்தி தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்
அடுத்த செய்தி கார்க் தீவு அருகே அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை!

ஜூலை 29, 2025
உலகம்

பழங்குடியின சான்றிதழ் கோரி: நூதன போராட்டம்.

நவம்பர் 22, 2024
உலகம்

பாகிஸ்தானை விட்டு வெளியேறும் மைக்ரோசொப்ட் நிறுவனம்!

ஜூலை 6, 2025
உலகம்

காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?