Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்…!

செப்டம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம் தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும்  தெரிய வருவதாவது,
நாளாந்தம் காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளி இயக்கும்  ம்பவம் இடம்பெறுகின்றது
மக்கள் தள்ளி பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட் செய்யப்படுவது வழக்கம்
இன்று(4) காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.  பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை
இதனால் இன்று காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலர் பாதிப்படைந்தனர்
வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை.
இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட செய்யுமாறு வடமராட்ச்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முந்தைய செய்தி எயார்பஸ் ஊழல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 18 வரை விளக்கமறியலில்!
அடுத்த செய்தி ஓட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலையில் அனுமதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 289 பேர் மீது விசாரணை

மே 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் போதைப் பொருளுடன் 29 வயதுடைய பெண் வியாபாரி கைது

ஜூன் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு

ஜூலை 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!(Video)

நவம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?