Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

செப்டம்பர் 3, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு உயர்த்தப்பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பான பாதிக்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (3) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் யை சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தலைமன்னார் வரையிலான புகையிரதக் கடவையில் கடமை பொறுப்பினை குறித்த பணியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் குறித்த பணியாளர்களுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் ஊடாக மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 7,500 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவாக 01-01-2026 முதல் மாதாந்தக் கொடுப்பனவு ரூபா 15,000 ஆக அதிகாரப்பூர்வமாக உயர்த்தப் பட்டதாக குறித்த பணியாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த பணியாளர்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளினால் கடவை ஊழியர்களின் அனைத்து விபரங்களும் புகையிரத திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உயர்வு பெற்ற கொடுப்பனவு வழங்கப் பட்டுள்ள போதும் எங்களுக்கு இதுவரை கொடுப்பனவு எதுவுமே கிடைக்கப்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட புகையிரத கடவை பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் தமக்கு எவ்வித கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அரச அதிபரிடம் தெரிவித்தனர்.பொலிஸ் அதிகாரிகளினால் அனைத்து விபரங்களும் புகையிரத நிலையத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும், கொடுப்பனவு இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீண்டகாலமாக மிகவும் குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் தமக்கு தற்போதைய பொருளாதாரச் சூழலில் இக் கொடுப்பனவு தாமதமாவது பெரும் வாழ்வாதாரக் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து புகையிரத கடவை பணியாளர்களின் கொடுப் பணவையும் குறிப்பாக அதிகரிக்கப்பட்ட நிலுவையில் உள்ள கொடுப்பனவை பெற்றுத் தருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மண் விநியோகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன்
அடுத்த செய்தி வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை செய்ய நடவடிக்கை!

அக்டோபர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாகரையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு…

மே 26, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவர்களை சந்திக்க சிறை சென்ற சிறிதரன் எம். பி

மார்ச் 3, 2025
இலங்கை

நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு.

பிப்ரவரி 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?