Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலின் அவுன்ட்சிக் – கார்த்தியே பகுதி துப்பாக்கிச் சூட்டுச் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் அவுன்ட்சிக்-கார்த்தியேவில் பகுதியில் (Ahuntsic-Cartierville) உள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மொன்றியல் பொலிஸார் (SPVM) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவுன்ட்சிக்-கார்த்தியேவில் உள்ள பூர்போன் வீதிக்கும் (Bourbonnière Street) அமிட்ஸ் தெருவிற்கும் (Fleury Street East அருகில்) இடைப்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

தகவல் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் ரோந்துப் படையினர், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையின் போது, குறைந்தது ஒரு துப்பாக்கிச் தோட்டா உறை (shell casing)
கண்டெடுக்கப்பட்டதாக மொன்றியல் பொலிஸ் ஊடகப் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சான்றுகள் அப்பகுதியில் கண்டறியப்பட்ட போதிலும், கட்டிடங்களுக்கோ அல்லது வாகனங்களுக்கோ சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு சோதனைகளை முன்னெடுத்தனர். சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கில், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்து வருவதுடன், அப்பகுதி மக்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி கியூபெக் அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை
அடுத்த செய்தி கனடாவில் அதிகரித்து வரும் புத்தக கொள்முதல் கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

லவால் ஸ்டார்பக்ஸ் கடையில் திடீர் துப்பாக்கிச் சூடு

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம் மீண்டும் நடைமுறை – கியூபெக் மாகாண அரசு அறிவிப்பு

ஜூன் 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் – நார்ட் வட்டார நிர்வாகம் மீது விசாரணை

நவம்பர் 28, 2025
கியூபெக்

மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!

ஆகஸ்ட் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?