கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பெருமளவிலான போதைப்பொருள் தொகையொன்று மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்தக் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்கலனில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள், “ஐஸ்” எனப்படும் மெத்தம்பெட்டமைன் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள போதைப்பொருளின் அளவு மற்றும் பெறுமதி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

