Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அரசாங்கம் எதிர்க்கட்சிகளை, அச்சுறுத்திப் பார்க்க முயற்சிகிறது-ரணில்!

செப்டம்பர் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தன்னை கைது செய்வதன் ஊடாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை, அச்சுறுத்திப் பார்க்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால், அதற்கு எவரும் அஞ்சக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், தனது லண்டன் விஜயம் உத்தியோகப்பூர்வமானது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தான் பதவியிலிருந்த காலத்தில் தனது மனைவியான மைத்ரி விக்ரமசிங்கவின், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குத் தனிப்பட்ட விஜயம் செய்ய, அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் தான் சென்றது உத்தியோகபூர்வ விஜயமாகும்.

அதனைத் தான் நிரூபித்தும் தன்னை கைது செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தனக்காக அனைத்து கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் ஒன்றிணைந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை என்பது நீண்டகாலமாக ஜனநாயகத்தின் வழியில் பயணிக்கும் நாடாகும்.

அந்த வகையில் செல்வந்த வர்க்கம் மாத்திரமல்ல சாதாரண மக்களும் நாட்டின் ஜனாதிபதியாக முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறே, ரணசிங்க பிரேமதாச, மைத்திபால சிறிசேன மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதிகளாகத் தெரிவாகினர்.

இலங்கை நாட்டில் நீண்டகாலமாகப் பல கட்சி ஆட்சிமுறையே உள்ளது.

அதனை ஒழிக்க அரசாங்கம் முற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணமிது எனக் குறிப்பிட்ட அவர், சர்வாதிகாரத்தைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி லண்டனில் பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 17 வயது இளைஞர் கைது!
அடுத்த செய்தி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கப்பல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஏப்ரல் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – கடற்தொழில் அமைச்சர்

மே 24, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு புகையிரதத்துக்கு அருகாமையில் சரக்கு ரயில் தடம்புரள்வு…

மார்ச் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?