லண்டனில் தொடருந்து நிலையங்கள் மற்றும் தொடருந்துகளில் சுமார் இரண்டு மணி நேர இடைவெளியில் பல பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 17 வயது இளைஞர் பிரித்தானிய போக்குவரத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல் சம்பவம் கடந்த 5 ஆம் திகதி மாலை 4.40 அளவில் ஹார்லெஸ்டன் நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற நிலையில், அதில் சந்தேகநபரால், பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர், அதே சந்தேக நபர் தேம்ஸ்லிங்க் தொடருந்திலும், பிளாக்ஃபிரையர்ஸ் தொடரு்நது நிலைய நடைமேடையிலும் மேலும் இரண்டு பெண்களை பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் மாலை 6.40 மணியளவில், செயிண்ட் பான்க்ராஸ் தொடரு்நது நிலையத்தை நோக்கி பயணித்த தேம்ஸ்லிங்க் தொடருந்து சேவையில் மற்றொரு பெண்ணையும், வெஸ்ட் ஹாம்ப்ஸ்டெட் தொடருந்து நிலையத்தில் மாலை 7 மணியளவில் மேலும் ஒரு பெண்ணையும் துன்புறுத்தியதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
துரித விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான இளைஞரை பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை கைதுசெய்துள்ளது.
