Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் தற்காலிக குடியேற்றத்தை பாதியாக குறைக்க திட்டம் – Parti Québécois தலைவர் அறிவிப்பு

ஆகஸ்ட் 30, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை பாதிக்கும் மேலாக குறைக்கப் போவதாக Parti Québécois கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளமொண்டோன் தெரிவித்துள்ளார்.

தற்போது கியூபெக்கில் 5 லட்சத்துக்கும் அதிகமான தற்காலிக குடியேற்றவாசிகள் இருப்பதாகக் கூறிய அவர், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த எண்ணிக்கையை 2 லட்சம் முதல் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் குறைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

கியூபெக்கின் தற்போதைய குடியேற்ற எண்ணிக்கை, வீடமைப்பு மற்றும் அரசாங்கத்தின் பொது சேவைகளை வழங்கும் திறனை விட அதிகமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணத் தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகி மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், குடியேற்ற விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

கியூபெக் நகரில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் முன்பாக பேசிய பிளமொண்டோன், குடியேற்ற முறையின் மீது மாகாண அரசாங்கம் முழுமையான கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஆளும் Coalition Avenir Québec கட்சியே பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் குடியேற்ற அமைச்சராக பதவி வகித்த தற்போதைய CAQ தலைவி கிறிஸ்டின் ஃப்ரெஷெட்டை நோக்கியும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனிடையே, பிளமொண்டோனின் திட்டத்திற்கு அவரது அரசியல் போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொதுப் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு குடியேற்றவாசிகளை குற்றம் சாட்டுவதாகவும், தற்காலிக குடியேற்றத்தை இவ்வாறு குறைப்பது கியூபெக்கில் ஏற்கனவே காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

எனினும், தற்காலிக குடியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கையில் விவசாயம், உற்பத்தித்துறை மற்றும் சுகாதாரத்துறை போன்ற தற்காலிக தொழிலாளர்களை அதிகமாக நம்பியுள்ள துறைகள் பாதுகாக்கப்படும் என Parti Québécois தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு பிராந்தியத்தின் தொழிலாளர் தேவைகளையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அக்கட்சி கூறியுள்ளது.

அதேவேளை, நிரந்தர குடியேற்றத்தையும் ஆண்டுக்கு 45 ஆயிரம் என்ற தற்போதைய அரசாங்க இலக்கிலிருந்து 35 ஆயிரமாக குறைக்கப் போவதாக Parti Québécois மீண்டும் உறுதியளித்துள்ளது.

தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை தங்களது இலக்கை அடையும் வரை, வெளிநாடுகளில் இருந்து புதிய பொருளாதார குடியேற்றவாசிகளை தெரிவு செய்வதற்கு பதிலாக, ஏற்கனவே கியூபெக்கில் வசிக்கும் தற்காலிக குடியேற்றவாசிகளில் நிரந்தர குடியிருப்புக்கு தகுதியானவர்களை தெரிவு செய்யப் போவதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.

கியூபெக் மாகாணத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியேற்றக் கொள்கை முக்கிய தேர்தல் விவகாரமாக மாறியுள்ளது.

முந்தைய செய்தி யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் – தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது
அடுத்த செய்தி 22வது திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கைகோர்க்கும் GMOA

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த நபருக்கு 28,000 டொலருர் அபராதம்

ஆகஸ்ட் 13, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல் நடத்துமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !

மே 16, 2025
கனடாமுதன்மை செய்தி

மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கத் தூண்டும் எரிபொருளின் விலை

ஜூன் 21, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜூலை 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?