ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பெயர் மாற்றக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், லேக் ஒன்ராறியோ ஏரியின் புதிய பெயர்ப் பலகையை நேற்று வெளியிட்டார்.
ஒன்ராறியோவின் வினோனா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், “Lake Ontario Now and Always” எனப் பொறிக்கப்பட்டுள்ள பலகை திறந்து வைக்கப்பட்டது.
ஏரி இனியும் என்றும் “Lake Ontario” என்றே அழைக்கப்படும் என டக் ஃபோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்ப் இதனை எப்படிப் பெயரிட்டாலும் பரவாயில்லை. உலகின் ஏனைய பகுதிகள் எப்போதும் இதனை Lake Ontario என்றே அழைக்கும். நாங்கள் வலிமையான, விடாமுயற்சியுள்ள கனடியர்கள்,” என அவர் கூறினார்.
கனடா–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
பேச்சுவார்த்தை இனி தொடர முடியாத நிலைக்கு சென்றுவிட்டதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னியும் முன்னதாக தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக கனடா சில வர்த்தக நடவடிக்கைகளை செப்டம்பர் 8ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், டக் ஃபோர்ட் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான வார்த்தைப் போரும் இடம்பெற்றுள்ளது.
டக் ஃபோர்ட், டிரம்ப்பை விமர்சித்த நிலையில், டிரம்ப் மறைந்த முன்னாள் டொரொன்டோ மேயர் ராப் ஃபோர்டுடன் ஒப்பிட்டு, ஒன்ராறியோ முதல்வரை விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

