Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

ஆகஸ்ட் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடனும் கலந்துரையாடினார்.

இதன்போது சிறைச்சாலையின் வளங்கள், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன் மற்றும் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அண்மையில் நாட்டின் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு
அடுத்த செய்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி – நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கரு

பிப்ரவரி 28, 2026
இலங்கை

மட்டக்களப்பில் நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக 60 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கானஸ்டபிள் இடைக்கால பணிநீக்கம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். நிலத்தில் கிடந்த நகையை எடுத்து கொடுத்தவரை தாக்கியவர்கள் விளக்கமறியலில்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனன தினம் அனுஸ்டிப்பு!

மார்ச் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?