Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

ஆகஸ்ட் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாவும் , உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, புதிதாக பதவியேற்றுள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், வடக்கு மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

சந்திப்பின்போது, ஆளுநர். யாழ்ப்பாண மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தாம் கடமையாற்றியதை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க நினைவுகூர்ந்தார். இதன்போது வடக்கு மாகாணத்தின் நிலைமை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, அத்துடன் வீதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இளையோரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜெயமகாவும் கலந்துக் கொண்டார்.

முந்தைய செய்தி காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல் ….

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பயிற்சி நிறைவு

ஜூன் 13, 2025
இலங்கை

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர நியமனம் இன்றி ஏமாற்றப்படும் நிலை!

டிசம்பர் 31, 2025
இலங்கை

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பலர் கைது!

செப்டம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?