Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இலங்கையில், முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களின் மீது வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளை எழுதி, அடுத்தடுத்த அதிகாரிகளுக்குக் கோப்புகளைக் கைமாற்றி விடும் பழக்கத்துக்கு, உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் பெறப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கையாண்ட விதத்தைச் சுட்டிக்காட்டியே, சட்டத்தரணி திலீப பீரிஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் கிடைக்கும் போது, அதிகாரிகள் வெறும் குறிப்புக்களை மட்டும் எழுதிவிட்டுத் தப்பித்துக்கொள்ளாமல், அத்தகவல்கள் மீது நேரடிப் பொறுப்பேற்று உரிய நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டதாக, சட்டத்தரணி திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, நடைபெற்ற தாக்குதல் குறித்து அன்றைய அரச புலனாய்வுச் சேவையின் (SIS) தலைவர் வழங்கிய மிக முக்கியமான உளவுத்துறைத் தகவலை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரிவு உள்ளிட்ட நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பி வைத்தமையை, சட்டத்தரணி திலீப பீரிஸ் நினைவுகூர்ந்தார்.

இருப்பினும், நாட்டின் பாதுகாப்பிற்குத் தீவிர அச்சுறுத்தல் நிலவிய அத்தகைய சூழலில், அந்த உளவுத்துறை ஆவணத்தின் மீது வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளின் சுருக்கக் குறிப்பை மட்டுமே எழுதி அவர் அனுப்பி வைத்ததாகக் சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சட்டத்தரணி திலீப பீரிஸ், ஒரு நாட்டின் பொலிஸ் தலைவராக இருந்து கொண்டு இத்தகைய ஆபத்தான அச்சுறுத்தலைக் கையாள இந்த அணுகுமுறை போதுமானதா என கேள்வியெழுப்பினார்.

முன்னெச்சரிக்கை தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற போதிலும், பேரழிவைத் தடுக்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்காகத் தலைமைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகள் தங்களுக்குரிய சட்டப்பூர்வ மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகி, வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளின் சுருக்கக் குறிப்பை எழுதி கோப்புகளை, அடுத்த அதிகாரிகளிடம் தள்ளிவிடுவது பாதுகாப்பை உறுதி செய்யாது என்பதையும், திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத் தீ
அடுத்த செய்தி இறக்கைகள் இல்லாத நவீன மின்விசிறி அறிமுகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அசாத் மௌளானாவிற்கு வேலை வழங்கியதாக டக்ளஸ் தெரிவிப்பு!

செப்டம்பர் 30, 2026
இலங்கை

மது போதையில் வாகனங்களை செலுத்திய 529 சாரதிகள் கைது!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி இடம்பிடித்தார்

பிப்ரவரி 26, 2026
இலங்கை

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் படுகாயம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?