Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சிவப்பு எச்சரிக்கையில் 93 சந்தேகநபர்கள்!

ஆகஸ்ட் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘நாடே ஒன்றாக’ தேசிய திட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சிவப்பு எச்சரிக்கைகள் மூலம் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டின் கீழ் மேலும் 35 முக்கிய குற்றவாளிகளும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குற்றச் செயல்கள் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு 1,490 மில்லியன் ரூபாய் மற்றும் 2025 ஆம் ஆண்டு 1,549 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதியில் 839 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் பதவி விலகல்!
அடுத்த செய்தி சட்டவிரோத மணல் அகழ்வினால் வயல் நிலங்களுக்கு சேதம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அரச நிதியை பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக,ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் முன்னிலையானார்.

ஜனவரி 28, 2026
இலங்கை

கனகராயன்குளம் பகுதியில் விபத்தில் சிக்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

மார்ச் 18, 2026
இலங்கை

வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா!

டிசம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?