கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் வயல் நிலங்களில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எந்தவித அனுமதியும் இன்றி நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் இரவு பகலாக உழவு இயந்திரங்களில் மணல் அகழ்வு இடம் பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளதோடு முகமாலை கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலே குறித்த சம்பவம் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

