Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ (Toxic) படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு

ஆகஸ்ட் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கே.ஜி.எஃப் திரைப்படத் தொடரின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் யஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘டாக்சிக்’ (Toxic) திரைப்படத்தின் பரபரப்பான டிரெய்லரைத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரோடக்ஷன்ஸ் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பிரபல பெண் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம்,  சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இத்திரைப்படம் 1940 முதல் 1970-ஆம் காலகட்டத்திற்குட்பட்ட வரலாற்றுப் பின்னணியில், கோவாவில் இயங்கிய போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சக்திவாய்ந்த கேங்ஸ்டர் மாஃபியா வலயங்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள டிரெய்லரில் யஷின் அதிரடியான ஆக்ஷன் அவதாரம், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் மற்றும் ஆழமான காதல் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. யஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முந்தைய கே.ஜி.எஃப் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஒரு புதுமையான சினிமா அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது.

முந்தைய செய்தி ஆகஸ்ட் 14-ல் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அடுத்த செய்தி இங்கிலாந்தில் டாம் ஹாலண்ட் – ஜெண்டாயா திருமணம்: ரூ.6.4 கோடியில் நடைபெற்ற 3 நாள் பிரம்மாண்ட கொண்டாட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

செப்டம்பர் 25, 2025
5
அண்மைய செய்திகள்சினிமா

என்றும் பேரழகி மீனா

பிப்ரவரி 22, 2025
சினிமா

கவினின் ‘மாஸ்க்’ திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!

அக்டோபர் 24, 2025
சினிமா

பிரியங்கா மோகன் நடிப்பில் “மேட் இன் கொரியா”

அக்டோபர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?