நடிகர் கவின்- மோனிகா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக நடிகர் நடிகர் கவின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி.
எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இதை அடுத்து கவினுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்

