சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழுந்தையை ஏற்று, அக்குழந்தைக்கு இனி வாழ்நாள் முழுவதும் துணைநிற்பதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்
அனைவருக்கும் வணக்கம். எனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாகச் செய்யவேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழுப்முழுப் பொறுப்புடனும், அன்புடனும் செய்து வருகிறேன்
இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்

