Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சவுதி – பாகிஸ்தான் – துருக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், உலக நாடுகளின் கவனிப்பை ஈர்க்கும் வகையிலான முக்கியப் பாதுகாப்பு முன்னேற்றம் ஒன்று அரங்கேறியுள்ளது. சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று முக்கிய இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் நேரடியாகப் பங்கேற்று அதிகாரப்பூர்வமாக கையொப்பமிட்டனர். இந்த உயர்மட்ட மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சமாக ‘கூட்டுத் தற்காப்பு’ கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஒப்பந்தத்தில் இணைந்துள்ள மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், அது மூன்று நாடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். இத்தகைய சூழலில், மூன்று நாடுகளும் தங்களது ஒருங்கிணைந்த ராணுவ பலம் மற்றும் கூட்டுப் பாதுகாப்பு வளங்களைப் பயன்படுத்திப் பதிலடி கொடுக்கவோ அல்லது பாதுகாப்பு உதவிகளை உடனடியாக வழங்கவோ கடமைப்பட்டிருக்கும்.

இந்த மூன்று நாடுகளின் கூட்டணி சர்வதேச அளவில் மிகப்பெரிய ராணுவ வலிமை படைத்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான், இஸ்லாமிய நாடுகளில் அணுஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடாகத் திகழ்கிறது. அதேவேளையில், துருக்கி உலகளாவிய நேட்டோ (NATO) அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய ராணுவப் படையைக் கொண்டுள்ளதோடு, நவீன ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் வான்வழிப் போர்த் திறன்களில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. மற்றொரு புறம், சவுதி அரேபியா அசைக்க முடியாத பொருளாதார நிதி ஆதாரங்களையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய சர்வதேச அரசியல் செல்வாக்கையும் பெற்றுள்ளது. இந்த மூன்று சக்திகளின் இணைவு பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமே தற்போது துருக்கியையும் இணைத்து முத்தரப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முற்றிலும் தற்காப்பு நோக்கமுடையது என்றும், இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் இலக்கு வைத்து உருவாக்கப்படவில்லை என்றும், அமைதியை விரும்பும் பிற பிராந்திய நாடுகளும் இதில் இணைய கதவுகள் திறந்திருப்பதாகவும் துருக்கி அரசு விளக்கம் அளித்துள்ளது.

முந்தைய செய்தி ஆகஸ்ட் 28-ல் வெளியாகிறது கவின், நயன்தாராவின் ” HI “
அடுத்த செய்தி துருக்கி, பாகிஸ்தான் உடனான காகித ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பைத் தராது – ஈரான் கடும் விமர்சனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தோனேசியாவில் நில அதிர்வு

ஜூன் 16, 2026
உலகம்

ஆஸ்திரேலியா அரசின் புதிய சட்டம்-டிசம்பர் 10 முதல் அமுலாக்கம்!

நவம்பர் 12, 2025
உலகம்முதன்மை செய்தி

பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி….

பிப்ரவரி 14, 2025
உலகம்

ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பஞ்சம்!

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?