Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்திலுள்ள கிரான்பி மிருகக்காட்சிசாலையில் (Granby Zoo) இருந்த ஜப்பானிய ‘மகாக்க்’ (Japanese macaque) குரங்கு ஒன்று பார்வையாளர் ஒருவரைச் சுரண்டிக் காயப்படுத்திய சம்பவத்தையடுத்து, குறித்த குரங்குடன் நேரடித் தொடர்பிலிருந்த பொதுமக்களை உடனடியாகச் சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ரகக் குரங்குகளிடம் அரிய வகை ‘ஹெர்பெஸ் பி’ (Herpes B) வைரஸ் காணப்படக்கூடும் என்பதாலும், அது மனிதர்களுக்குப் பரவினால் தீவிரமான சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் கியூபெக் பொது சுகாதாரத் துறை இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று மிருகக்காட்சிசாலையில் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக மேடைப் பகுதி ஒன்று ஊழியர்களின் கவனக்குறைவால் சரியாகப் பூட்டப்படாமல் திறந்திருந்துள்ளது.

இதைப் பயன்படுத்திய பெண் ஒருவர், தனது குழந்தைகளுடன் அந்தப் பகுதிக்குள் சென்று குரங்குக்கு உணவளிக்க முயன்றுள்ளார்.

இதன்போது, அப் பெண்ணைக் குரங்கு சுரண்டிக் காயப்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், அவர் தற்போது நலமாக இருப்பதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாதுகாப்பற்ற நிலையில் அப்பகுதி சில மணிநேரம் இருந்ததால், வேறு ஏதேனும் பார்வையாளர்கள் குரங்கைத் தொட்டிருக்கக் கூடும் என்ற அச்சத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிரான்பி மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தனது பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக மீளாய்வு செய்துள்ளதுடன், இது தொடர்பான உள்நாட்டு விசாரணையையும் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அடுத்த செய்தி I Phone பாவனையாளரா நீங்கள் ? இனி இந்த தவறை செய்யாதீர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரிய சோனா லக்கோயன் ஆலிவர்

மே 15, 2026
கனடாமுதன்மை செய்தி

நிமோனியாவால் பலியான கனேடியர்

ஜனவரி 4, 2026
கியூபெக்

‘மேப்பிள் சிரப்’ தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தாக்கல்

ஏப்ரல் 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் லோரியர் மெட்ரோ அருகே கத்திக்குத்து தாக்குதல் – சந்தேக நபர் கைது

மார்ச் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?