யாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் மீன்கள் திரளாக இறந்து மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நன்னீர் அணைக்கட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் நீரேரியில் நேற்று அதிகளவிலான மீன்கள் இறந்து மிதந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவை அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்ற சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டிலும் பதிவாகியிருந்த நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த உயிரிழப்புக்கான காரணமாக, நிலவி வரும் கடும் வெப்பத்தால் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்திருப்பதும், அதன் காரணமாக நீரில் உப்பின் செறிவு அதிகரித்திருப்பதும், ஒட்சிசன் அளவு குறைந்திருப்பதும் இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் உண்மையான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

